செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (07:25 IST)

மதுரையை அடுத்து மேலும் ஒரு மாவட்டத்தில் ஊரடங்கு: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மதுரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் பெரியகுளம் நகராட்சி ஏற்கனவே முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது தேனி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் அவற்றின் பரவலை குறைக்கும் பொருட்டு இதர நகராட்சிகளான போடிநாயக்கனூர், தேனி, சின்னமனூர், கூடலூர் நகராட்சி பகுதிகளில் ஜூன் 24 முதல் சில கட்டுப்பாடுகள் செயல்படுத்த உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய 5 மாவட்டங்களை அடுத்து  தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது