வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 19 செப்டம்பர் 2020 (09:46 IST)

கொரோனா அடுத்த அலை: 2021ல் பெரும் ஆபத்தை சந்திக்கப்போகும் இந்தியா

ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு கொரோனா 2-வது அலை ஏற்படலாம் என வல்லுநர் குழு எச்சரித்துள்ளது.

இது குறித்து தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராமசுப்பிரமணியன்,  "கொரோனா வைரஸ் தொற்று செப்டம்பர் மாதம் குறையும் என்று எதிர்பாத்தது தவறாக உள்ளது. இந்த மாதம் தான் கொரோனா தமிழகத்தில் குறைய தொடங்கியுள்ளது. அதனால் இன்னும் மூன்று மாதகாலம் ஆகலாம் என்று தெரிவித்தார்.

அத்துடன் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு கொரோனா 2-வது அலை ஏற்படலாம். அதில் இந்தியா பெரும் ஆபத்தை சந்திக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

இந்நோய் தொற்றிற்கு தடுப்பூசி கிடைத்தாலும் அது மக்களை சென்றடைய இன்னும் ஒரு வருடம் ஆகும்.  எனவே, காய்ச்சல், சளி என ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.  மற்ற நோயாளிகள் அவசியம் இன்றி மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.