1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (14:31 IST)

மக்களை தேடி மருத்துவம்: விரைவில் துவங்கி வைக்கும் ஸ்டாலின்!

மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல். 

 
கொரோனா ஊரடங்கு காலத்தில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இனி நோய் உள்ளவர்கள் மாத்திரைகள் வாங்குவதற்கு சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், இவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
முதற்கட்டமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் உடைய 20 லட்சம் பேர் கண்டறியப்பட்டு வீடு தேடி சென்று மாத்திரைகளை வழங்கப்படும் என்றார்.