ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 115 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்… அமைச்சர் தகவல்!
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின் அதிகமாக பாதிக்கப்பட்ட நகரம் சென்னைதான். அப்போது சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இப்போது கொரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இப்பொது வெறும் 115 நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாக அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.