வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (19:09 IST)

அமித்ஷாவால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அமைச்சர் பதவியா?

narayan rane
மத்திய அமைச்சரவையில் நேற்று 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றார்கள் என்பதும் அதில் தமிழகத்தைச் சேர்ந்த  எல் முருகன் அவர்களும் ஒருவர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்று பதவியேற்ற 43 அமைச்சர்களில் ஒருவர் அமைச்சர் அமித்ஷாவால் குற்றம்சாட்டப்பட்டவர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அமித்ஷாவால் கடுமையாக எச்சரிக்கப்பட்டவர் நாராயண் ரானே. இவருக்கு தற்போது மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது 
 
ரூபாய் 100 கோடி கருப்பு பணம் பதுக்கியதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நாராண் ரானே சிறைக்கு செல்வார் என்றும் அமித்ஷா கூறியிருந்தார் இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 2019ஆம் ஆண்டு நாராயணன் ரானே பாஜகவில் இணைந்தார் என்பதும் தற்போது அவர் மத்திய அமைச்சராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது