செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2024 (19:22 IST)

ஒடிஷாவை ஆட்டி வைத்த விகே பாண்டியனை 5 நாட்களாக காணவில்லை.. தலைமறைவா?

ஒடிஷா முதல்வர் நவின் பட்நாயக்கின் வலது கையாக கடந்த 24 ஆண்டுகளாக இருந்த தமிழரான விகே பாண்டியன் திடீரென மாயமாக இருப்பதாகவும் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் ஒடிசாவில் பாராளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடந்த நிலையில் மொத்தம் உள்ள 21 எம்பி தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட நவின் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் வெற்றி பெறவில்லை. அது மட்டும் இன்றி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது.
 
இந்த நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சிக்குள் பிரச்சனை வெடித்திருக்கும் நிலையில் தோல்விக்கு வி.கே. பாண்டியன் தான் காரணம் என்று, தேர்தல் பிரச்சாரத்தில் அவரது பெயர் தான் முழுமையாக இருந்தது என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
 
இந்த நிலையில் தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து விகே பாண்டியன் மாயமாகிவிட்டதாகவும் அவரது வீடும் வெளிப்புறமாக பூட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் தலைமறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நவின் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்று அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
Edited by Siva