வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2024 (19:14 IST)

கங்கனா ரனாவத்தை தாக்கிய சிஐஎஸ்எஃப் பெண் காவலர் மீது வழக்குப்பதிவு.. கைதாகிறாரா?

Kangana Renaut
பாஜக எம்பி கங்கனா ரனாவத்தை தாக்கிய சிஐஎஸ்எஃப் பெண் காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
பாஜக எம்பி கங்கனா ரனாவத்தை தாக்கிய சிஐஎஸ்எஃப் பெண் காவலர் மீது ஐபிசி பிரிவு 323 மற்றும் 341 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் பெண் காவலர் இன்னும் கைது செய்யப்படவில்லை என மொஹாலி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
 
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவர் விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறியதாக குல்விந்தர் கவுர் என்ற பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். 
 
இது குறித்த புகைப்படம் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெண் காவலர் மீது கங்கனா ரனாவத் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva