வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (13:27 IST)

ஒடிஷாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக.. நவீன் பட்நாயக் ஆட்சிக்கு முடிவு..!

ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது போலவே ஒடிசாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அங்கு ஆளும் கட்சியான நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
ஒடிசா மாநிலத்தில் மொத்தம் 147 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் பாரதிய ஜனதா கட்சி 73 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் நான்கு தொகுதிகள் இருந்தால் ஒடிசாவில் பாஜக ஆட்சியை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் 57 தொகுதிகளிலும் காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
73 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் பாஜக, ஒடிஷா மாநிலத்தில் ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva