1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 18 நவம்பர் 2023 (07:31 IST)

இறுதி போட்டி நடக்கவுள்ள பிட்ச் எப்படி இருக்கும்? மைதான பராமரிப்பாளர் பேட்டி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை குஜராத் அகமதபாத் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான பயிற்சியில் இரு அணிகளும்  ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா மைதானத்தை சோதனை செய்தார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்நிலையில் அகமதாபாத் மைதான பராமரிப்பாளர் விக்கெட் குறித்து பேசியுள்ளார். அதில் “இறுதிப் போட்டிக்கு புதிய பிட்ச்சா அல்லது பயன்படுத்திய பிட்ச்சா என்பது பற்றி சொல்ல முடியாது. அதிக எடையுள்ள ரோலர் பயன்படுத்தப்பட்டால் பிட்ச் மெதுவாக மாற வாய்ப்புண்டு. அப்படி என்றால் நல்ல ஸ்கோர் எடுக்க முடியும். முதலில் பேட்டிங் செய்யும் அணி 310 ரன்களுக்கு மேல் சேர்த்தால் அதை டிஃபெண்ட் செய்ய முடியும்.  ஆனால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி ரன்கள் சேர்ப்ப்து மிகவும் கடினம்” எனக் கூறியுள்ளார்.