1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (08:00 IST)

கமல் காட்சிகளை டூப் வைத்து ஷூட் செய்யும் ஷங்கர்!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்தபின்னர்தான் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என தெரிகிறது.

இப்போது இறுதிகட்ட ஷுட்டிங் விஜயவாடாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரம்மாண்டமான ஒரு காட்சியை படமாக்க 8000 துணை நடிகர்களை பயன்படுத்தியுள்ளாராம்  இயக்குனர் ஷங்கர். கமல்ஹாசனின் சில காட்சிகளை அவர் இல்லாமல் டூப் வைத்து இப்போது இயக்கி வருகிறாராம் இயக்குனர் ஷங்கர். விரைவில் கமல்ஹாசன் இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.