திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (12:55 IST)

பேருந்து நிலையத்தை திறந்து வைத்த எருமை! – கிராம மக்கள் நூதன நிகழ்ச்சி!

Buffalo
கர்நாடகாவில் பேருந்து நிலையம் கட்டி தராத அரசை கண்டித்து எருமை மாட்டை கொண்டு பேருந்து நிலையம் திறந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிறுத்தம் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் அக்கிராமத்திலிருந்து வெளியூர் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க கோரி கடந்த பல ஆண்டுகளாக அம்மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் நூதனமான போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

அதன்படி தென்னை மட்டை, கீற்றுகளால் பேருந்து நிறுத்தம் போன்ற ஒன்றை கட்டி எருமை மாடு ஒன்றை கொண்டு அந்த பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.