வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2017 (16:00 IST)

வாய்ச்சவடால் விடும் மோடி: போட்டுத்தாக்கும் விஜயதாரணி!

வாய்ச்சவடால் விடும் மோடி: போட்டுத்தாக்கும் விஜயதாரணி!

தனது சொந்த ஊரான வாத்நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று பேசிய பிரதமர் மோடி, சுகாதார திட்டங்கள் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுகாதார திட்டங்கள் முடக்கப்பட்டன. நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.


 
 
மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டசபை கொறடாவான விஜயதாரணி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை பதவு செய்துள்ளார்.
 
இதில் பேசிய விஜயதாரணி 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிதான் சுகாதாரத்திற்கு வித்திட்டது என கூறி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு சுகாதாரத் திட்டங்களை பட்டியலிட்டார்.
 
மேலும் காங்கிரஸ் கொண்டுவந்த சுகாதார திட்டங்களை பாஜக அரசு தொடர வேண்டிய நிலையில் உள்ளது. இவர்கள் எதையும் உருவாக்கவில்லை. வாஜ்பாய் காலத்திலும் உருவாகவில்லை. இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் உருவான திட்டங்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள் சொந்தக் கட்டிடத்தில் இயங்க காங்கிரஸ் ஆட்சியில் போதிய நிதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதனை இன்னும் பாஜக அரசு செயல்படுத்தவில்லை.
 
ஆனால் எந்த அடிப்படையில் பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சி மீது குற்றச்சாட்டு சொல்கிறார். மக்களை ஏமாற்றும் விதத்தில் பேசி வருகிறார். மோடி எப்பவும்போல வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் கடைக்கோடி எம்எல்ஏ நான், என்னாலேயே இந்தளவு விஷயங்களை சொல்ல முடிகிறது. ஒரு நாட்டின் பிரதமர் எந்த ஒரு விவரங்களையும் குறிப்பிடாமல் பேசிக்கொண்டிருப்பது தவறு என வன்மையாக கண்டித்தார் விஜயதாரணி.