செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2017 (12:13 IST)

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
டெல்லியில் பட்டாசு வெடிப்பதன் மூலம் காற்று மாசுப்படுவதால் கடந்த ஆண்டு நம்பவர் மாதம் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் காற்று மாசு ஏற்படும் விதத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாசு காட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது.
 
இதையடுத்து செப்டம்பர் மாதம் இந்த தடைகளை தற்காலிகமாக திரும்ப பெற்றது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு காற்று மாசு எவ்வாறு உள்ளது என்பதை பார்க்க வேண்டி இருப்பதால் இந்த ஆண்டு பாட்டாசுக்கான தடையை நீக்கியது. 
 
இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது என்றும் 2030 ஆம் ஆண்டில் உலகிலே காற்று மாசு உள்ள நகரமாக டெல்லி முன்னிலை வகிக்கும் என்றும் சங்கர் நாராயணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மாதம் இறுதி வரை டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.