தமிழ்நாடு இல்லாமல் இந்தியா இல்லை: துணை ஜனாதிபதி
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு மீதும், தமிழர்கள் மீதும், தமிழ் மீதும் பாஜக பிரமுகர்களுக்கு திடீர் பாசம் வந்துள்ள நிலையில் தற்போடு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களும் தமிழ்நாடு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பெருமையாக பேசியுள்ளார்.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ‘உலகில் நம்முடைய நாகரிகம் மிகவும் தொன்மையான நாகரிகம். நம் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு இல்லாமல் இந்தியா இல்லை. இந்தியாவின் ஒரு பகுதிதான் தமிழ்நாடு. தமிழர் என்பதிலும் இந்தியர் என்பதிலும் பெருமிதம் கொள்ள வேண்டும். குடும்ப முறை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மன அழுத்ததில் இருந்து விடுபட இசையே சிறந்த மருந்து
இவ்வாறு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.