1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (22:10 IST)

இன்று உண்மையான தமிழ்நாடு நாள் கிடையாது: கி.வீர‌மணி

இன்று அதாவது நவம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இன்றைய கொண்டாட்டத்திற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்த இந்த நாளை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு தினம் என்று கொண்டாடப்படுவதோடு, இனி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது
 
ஆனால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ம் தேதியைத்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று திராவிட கழக பொதுச்செயலாளர் கி.வீர‌மணி தெரிவித்துள்ளார்.

"மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்டு வந்த தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி , ஆங்கிலம் தமிழ்- உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இனி தமிழ்நாடுதான் என்ற தீர்மானத்தை 1967 ஜூலை 18-ஆம் நாள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அண்ணா நடைமுறைப்படுத்தினார் என்பதால் இந்த நாளையே தமிழ்நாடு தினம் என கொண்டாட வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது