1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2023 (12:03 IST)

அமெரிக்காவில் சமந்தாவுக்கு அறுவை சிகிச்சை - பரிதாப நிலையில் வெளிவந்த புகைப்படம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் தொடரின் ரீமேக் என சொல்லப்பட்டது. 
 
ஆனால் அதனை சமந்தா மறுத்து  தான் நடிக்கும் தொடர் ரீமேக் இல்லை என்று தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிட்டாடல் தொடரில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளில் சமந்தா நடித்து முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. 
 
இதையடுத்து அவர் கைவசம் இருக்கும் ஒரே படமான குஷி படமும் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த படத்தையும் முடித்துவிட்டு அவர் சினிமாவில் நடிப்பதில் இருந்து சுமார் ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். காரணம் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சைக்காக இந்த பிரேக் என கூறினார். 
 
இந்நிலையில் தற்போது USAவில் சிகிச்சை எடுத்து வரும் சமந்தாவுக்கு தற்ப்போது அறுவை சிகிச்சை நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து 6 மாதம் எந்த ஒரு படப்பிடிப்பிலும் சமந்தா கலந்துகொள்ள போவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். இதனை கேட்டதும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர். மேலும் விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறார்கள்.