திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2023 (20:10 IST)

பூமிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

புது டில்லியை சேர்ந்த நடிகை பூமிகா 2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்குச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. 
 
அதன் பின்னர் தெலுங்கு, தமிழ், இந்தி என மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பூமிகா பாரத் தாகூர் என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். தற்போது 44 வயதாகும் பூமிகாவிற்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் பூமிகாவின் குடும்ப புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. அட நம்ம பூமிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா என எல்லோரும் ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.