1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (12:28 IST)

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: ராகுல்காந்தி நலம் விசாரித்தார்

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: ராகுல்காந்தி நலம் விசாரித்தார்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த சில வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. சற்றுமுன் வெளியான அறிக்கை ஒன்றிலும் அவரது உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்குள்ள மருத்துவர்களிடம் வாஜ்பாய் உடல்நிலை குறித்து கவலையுடன் கேட்டறிந்தனர்.
 
வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: ராகுல்காந்தி நலம் விசாரித்தார்
இந்த நிலையில் சற்றுமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்து வாஜ்பாய் நலம் குறித்து விசாரித்தார் அதேபோல் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து விசாரிக்க, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சற்றுமுன் வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.