1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (12:11 IST)

ஒமிக்ரான் எதிராக தடுப்பூசி செயல்படாவிட்டாலும்... சுகாதார அமைச்சகம் புது தகவல்!

ஆண்ட்டிபாடிகள், இம்யூனிட்டி போன்ற பலன்கள் இருப்பதால் வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் மிகுந்த பலன் அளித்து வருவதாகவும் சுகாதார அமைச்சகம் தகவல். 

 
இந்தியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி போட்டாலும் ஒமிக்ரான் வைரஸ் தாக்கும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் குறிப்பாக தடுப்பூசி போடாதவர்களை ஒமிக்ரான் வைரஸ் கடுமையாக தாக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
மேலும் தற்போது போடப்படும் தடுப்பூசிகள் ஒமிக்ரான் வைரஸை அழிக்க முடியாது என்றாலும் இதனால் ஒமிக்ரான் வைரஸால் ஏற்படும் கடுமையான விளைவுகளை குறிப்பாக உயிரிழப்புகளை தடுப்பூசி குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் மூலம் உடலின் ஆண்ட்டிபாடிகள், இம்யூனிட்டி போன்ற பலன்கள் இருப்பதால் வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் மிகுந்த பலன் அளித்து வருவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் முகக்கவசம் சரியாக அணிந்து இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டு காற்றோட்டமாக இருந்தால் ஒமிக்ரான் குறித்து அச்சப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.