செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (20:00 IST)

தமிழ்நாடு வந்த மூவருக்கு கொரோனா தொற்று: ஒமிக்ரான் பாதிப்பா?

இன்று காலை லண்டனில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர்களுக்கு ஒமிக்ரான் சோதனை செய்யப்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சற்று முன்னர் இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த வகையான பாதிப்பு என்பது இன்னும் நான்கு நாட்களில் தெரியவரும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே அண்டை மாநிலமான கர்நாடகத்தில் ஐந்து பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையிலும் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்து விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது