திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (08:01 IST)

போராடி வரும் விவசாயிகள் மீது தேசப் பாதுகாப்பு சட்டம்: காவல்துறையின் அதிரடி அறிவிப்பு..!

farmers protest
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் போராடிவரும் விவசாயிகள் மீது தேச பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அம்பாலா காவல்துறை இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் ஷம்பு என்ற பகுதியின் எல்லையில் போராடிவரும் விவசாய சங்கங்களின் தலைவர்களை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு நபரை 12 மாதங்கள் வரை காரணம் இன்றி தடுத்து வைக்க முடியும் என்றும் ஒரு நபரை இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளதாக மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடிவரும் நிலையில் இந்த போராட்டத்தை நசுக்கும் வகையில் அவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது கொடூரமானது என விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அம்பாலா காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva