திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (20:12 IST)

என்னை சிறையில் அடையுங்கள்: மகாராஷ்டிரா முதல்வர் ஆவேசம்!

என்னை சிறையில் அடையுங்கள் என்றும் என்னுடைய உறவினர்களை தொல்லை படுத்தாமல் இருங்கள் என்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இது குறித்து ஆவேசமாக பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே என்னை வேண்டுமானால் சிறையில் அடைத்து கொள்ளுங்கள் என்றும் என்னுடைய உறவினர்களை எந்தவிதத் தொல்லையும் செய்யாதீர்கள் என்று கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது