புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (23:48 IST)

கருப்பட்டியில் உள்ள சத்துக்களும் அற்புத மருத்துவ குணங்கள்

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
 
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
 
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
 
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.
 
கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனெனில் உடல்  செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.
 
கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி  செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.
 
கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்கிறது. குடலின்  இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது.