இந்திய ஜனாதிபதி யார்னே தெரியல! விழி பிதுங்கிய ஆசிரியர்! – உ.பியில் மோசடி அம்பலம்!
உத்தர பிரதேசத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் மோசடி நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் முதல் மதிப்பெண் எடுத்தவருக்கு இந்திய ஜனாதிபதி யார் என்பது கூட தெரியாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 69 ஆசிரியர் பணிக்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த தேர்வில் மோசடி நடந்ததாகவும், பலர் மறைமுகமாக பணம் கொடுத்து ஆசிரியர் பதவி பெற்றுள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் ஆசிரியர்களின் பணி நியமன ஆணையை ரத்து செய்துள்ளது.
இதை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் தேர்வு எழுதி முதல் மதிப்பெண் பெற்றிருந்த தர்மேந்திர படேல் என்பவரை விசாரித்ததில் அவருக்கு பொது அறிவு கேள்விகளுக்கு கூட விடை தெரியவில்லை என காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கே விழு பிதுங்க அவர் முழித்ததாகவும் கூறியுள்ளார்.