1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (14:59 IST)

பசுவை கொன்றால் 10 ஆண்டுகள் சிறை! – ஆதித்யநாத்தின் அவசர சட்டம்!

உத்தர பிரதேசத்தில் பசுக்களை கொல்வதை தடுக்க அம்மாநில சட்டமன்றம் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த நாள் முதலாய் பசுக்கள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக ஆதரவற்று சாலைகளில் திரியும் பசுக்களை தத்து ஏற்று வளர்ப்பவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுவதாக உ.பி அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது உத்தர பிரதேசத்தில் பசுக்களை கொல்வதை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசத்தில் பசுக்களை கொள்பவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அனுமதியின்றி வண்டிகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்பவர்களது வாகன உரிமை மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பசுக்களை கொன்ற குற்றவாளிகள் தலைமறைவானால் அவர்களது போஸ்டர்களை பொது இடத்தில் ஒட்டவும், முறைகேடாக பசுக்களை கொல்வதற்கு கொண்டு செல்பவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு பசுக்களை பராமரிக்கும் செலவை ஏற்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.