இப்பவே சீனாவை அழிக்கணும்; லடாக் நோக்கி சென்ற சிறுவர்களை தடுத்த போலீஸார்!

Boys
Prasanth Karthick| Last Modified திங்கள், 22 ஜூன் 2020 (15:17 IST)
இந்தியா – சீனா இடையே மோதல் எழுந்துள்ள சூழலில் உத்தர பிரதேச சிறுவர்கள் சீனாவை அழிப்பதாக புறப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் சில நாட்கள் முன்னதாக ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் வீரர்கள் பலியானார்கள். இதனால் எல்லைப்பகுதியில் இருநாடுகளுக்கு இடையே சர்ச்சையான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் சீனா மீது இந்தியாவில் மக்கள் பலர் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேசம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்த 10 முதல் 12 வயது வரை உடைய பத்து சிறுவர்கள் சீனாவை அழிக்க வேண்டும் என உறுதியேற்று கொண்டு லடாக் எல்லை நோக்கி புறப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் அந்த சிறுவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரைகள் வழங்கி திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :