தொடர்புடைய செய்திகள்
- ஜூன் மாதத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்! – மத்திய அரசு தகவல்!
- 17.10 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- இந்திய பழங்குடி பெண்களை கொன்றாரா பில்கேட்ஸ்!? – கைது செய்ய சொல்லி ட்ரெண்டிங்!
- 70% மக்கள் தடுப்பூசி போட்டாதான் கொரோனா அழியும்! – உலக சுகாதார அமைப்பு!
- தொடர்ந்து 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் இன்றைய நிலவரம்!
தடுப்பூசி போட்டுக்கிட்டாதான் மதுபானம், மாத சம்பளம்! – உத்தரபிரதேசம் கறார்!
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே மதுபானம் என உத்தர பிரதேசத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் தடுப்பூசிகளை போட்டு கொள்ள மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் உத்தர பிரதேசம் எடவாடா பகுதியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழை காட்டினால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிரோசாபாத் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
