செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (08:50 IST)

வசூல் ராஜா பாணியில் டாக்டர்கள் ஆள்மாறாட்டம் செய்த நீட் தேர்வு! – அம்பலமான உண்மைகள்

உத்தரபிரதேசத்தில்  நீட் நுழைவு தேர்வில் மாணவர்களுக்கு பதிலாக மருத்துவர்களே ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வசூல் ராஜா படத்தில் மருத்துவ படிப்பு படிக்க நினைக்கும் ரௌடி ஹீரோ அங்குள்ள மருத்துவர் ஒருவரையே ஆள்மாறாட்டம் செய்து தேர்வுக்கு அனுப்புவார். அதுபோன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் உண்மையாக நடந்துள்ளது.

உத்தரபிரதேசம் பிரக்யராஜ் பகுதியை சேர்ந்த சகில் சோன்கர் என்ற மாணவர் சமீபத்தில் நடந்த நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளார். டெல்லியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் எழுத விண்ணப்பித்திருந்த அவருக்கு பதிலாக எம்பிபிஎஸ் முடித்த டாக்டர் ஒருவர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல அனுப் படேல் என்ற மாணவருக்கும் ஒரு டாக்டர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை கைடு செய்துள்ள போலீசார், 15 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.