மாப்பிள்ளையை கடத்திய பாஜக எம்.எல்.ஏ – உ.பியில் பரபரப்பு

bjp
Last Updated: திங்கள், 15 ஜூலை 2019 (15:47 IST)
உத்தர பிரதேசத்தில் தனது மகளை காதல் திருமணம் செய்து கொண்ட பையனை ஆள் வைத்து கடத்தியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக கட்சியின் பித்தாரி செயின்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா. இவரது மகள் சாக்‌ஷி மிஸ்ரா. இவர் அந்த பகுதியை சேர்ந்த அஜிதேஷ் குமார் என்பவரை காதலித்து வந்தார். அஜிதேஷ் பட்டியலினத்தை செர்ந்தவர் என்பதால் சாக்‌ஷி வீட்டில் ப்யங்கர எதிர்ப்[பு இருந்தது.

இதனால் அஜிதேஷோடு வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டார் சாக்‌ஷி. தனது அப்பாவால் ஏதாவது ஆபத்து வருமோ என்று பயந்த சாக்‌ஷி “எங்கள் உயிருக்கு எனது அப்பாவால் ஆபத்து இருக்கிறது. போலீஸார் எங்களை காப்பாற்ற வேண்டும்” என கோரிக்கையும் வைத்தார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி அளித்திருந்த மனுவை விசாரிப்பதற்காக காதல் ஜோடி நீதிமன்றம் அழைக்கப்பட்டிருந்தார்கள். இன்று காலை நீதிமன்றம் வந்த சாக்‌ஷி, அஜிதேஷ் தம்பதியினரை துப்பாக்கி காட்டி மிரட்டியது ஒரு கும்பல். பிறகு அஜிதேஷை மட்டும் ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு எஸ்கேப் ஆகியது அந்த மர்ம கும்பல். சிசிடிவி கேமராவில் பதிவாகிய காரின் நம்பரை வைத்து காரை தேடி வருகின்றனர் போலீஸ். இது தனது தந்தையின் வேலைதான். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாக்‌ஷி போலீஸில் புகார் அளித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :