திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (08:29 IST)

பள்ளிவாசல் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! – இருவர் பலி!

உத்தரபிரதேசத்தில் பள்ளிவாசல் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ஜூடா என்ற கிராமத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் ஒன்று இருந்துள்ளது. இங்கு நேற்று வழக்கம்போல அப்பகுதி இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியுள்ளனர்.

அப்போது திடீரென பள்ளிவாசலின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதை கண்டு பலர் அலறி அடித்து ஓடியுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர், தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.