1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 மே 2022 (09:16 IST)

பெண்களை இரவு பணியில் ஈடுபடுத்தக்கூடாது..! – யோகி ஆதித்யநாத் அதிரடி!

உத்தர பிரதேசத்தில் தனியார் நிறுவனங்கள் பெண்களை இரவு நேர பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் உத்தர பிரதேச அரசு தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு சட்டத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத் கடந்த ஆட்சியின்போதே ஆண்டி ரோமியோ ஸ்குவாட் போன்றவற்றை உருவாக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது தனியார் நிறுவனங்கள் பெண் பணியாளர்களை இரவு நேர பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறாக பெண் பணியாளர்களை இரவு நேர பணியில் ஈடுபடுத்தினால், குறிப்பிட்ட பெண்ணிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் என்றும், இலவச உணவு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை பெண் பணியாளருக்கு உறுதிபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.