வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (12:59 IST)

நாங்களும் இந்தியில மருத்துவம், பொறியியல் படிப்போம்! – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் இந்தி வழி மருத்துவம், பொறியியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தி மொழி வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா இந்தியை தேசிய மொழியாக்குவதன் அவசியம் குறித்து பல நிகழ்ச்சிகளிலும் பேசி வருகிறார்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் மருத்துவ படிப்புகளை முற்றிலும் இந்தி வழியில் படிப்பதற்கான இந்தி பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுகுறித்து வரவேற்று கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இதன் மூலம் மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியை பெற ஆங்கிலம் தேவை என்ற தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.


தற்போது இதை பின்பற்றி உத்தர பிரதேசத்திலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியில் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Edited By: Prasanth.K