வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (19:16 IST)

சிவன் வேடத்தில் நடித்த கலைஞர் மேடையிலேயே மரணம்! பரவலாகும் வீடியோ

utterpradesh
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் மாவட்டத்தில் ராம்லீலா நாடக மேடையில் சிவபெருமான் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த நபர் மயங்கி விழ்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகில் வாழும் உயிர்கள் எப்போது,எந்த   நிமிடத்தில் உயிர் போகும் என்று யாராலும் கூற முடியாது. ஆனால், சில நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், போட்டிகள், மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கும்போது, கலைஞர்கள் மேடையிலேயே உயிர் பிரியும் காட்சிகள் பல வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மா நிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பெலாசின் கிராமத்தில், ராம்லீலா நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதில், நாடக கலைஞர்கள் நடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, சிவன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த கலைஞ்ர் மாரடைப்பு ஏற்பட்டு, மேடையிலேயே உயிரிழந்தார்.இந்த வீடியோ பரவலாகி வருகிறது.

Edited by Sinoj