திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (18:20 IST)

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ ரிக்ஷா...கண்டுகொள்ளாமல் சென்ற அரசு அதிகாரிகள்

utterpradesh
உத்தரபிரதேசத்தில் பயணிகளுடன் சென்ற ரிக்சா சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அந்த வழியில் சென்ற அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சீதாப்பூர் பகுதியில் பயணிகளுடன் வந்த ஒரு இ ரிக்சா வாகனம், மழை பெய்து குண்டும் குழியும் பள்ளங்கள் நிரம்பிய பகுதியில் சென்றபோது, திடீரென்று கவிழ்ந்தது.

அப்போது, அந்த வழியில் அரசு அதிகாரிகளுடன் சென்ற ஒரு வாகனம் இந்த வாகனம் விபத்தில் சிக்கியதைப் பொருட்படுத்தாமல் சென்றது. இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் கவிழ்ந்த இ-ரிக்ஷாவில் இருந்தவர்களை தூக்கி விட்டனர்.

Edited by Sinoj