UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி என்ன?
யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்காக விண்ணப்பிக்கும் காலம் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர், பிப்ரவரி 18 ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தேதியை நீட்டிக்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, தற்போது பிப்ரவரி 21 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22 ஆம் தேதி இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான மத்திய அரசுத் தேர்வாளர் பணியிடங்களுக்காக 979 பணியிடங்களுக்கு தேர்வு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 21 முதல் 32 வயது வரை இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வுக்கான கல்வித் தகுதி மற்றும் முழு விவரங்களை தெரிந்து கொள்ள https://upsc.gov.in/exams-related-info/exam-notification என்ற இணைப்பை கிளிக் செய்யலாம்.
Edited by Siva