வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (13:20 IST)

யுபிஎஸ்சி புதிய தலைவர் நியமனம்.! யார் இந்த பிரீத்தி சுதன்..?

Preethi
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக பிரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.   
 
யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி பதவி வகித்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்வில் சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த 20ம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை இன்று ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, புதிய தலைவராக பிரீத்தி சுதனை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இவர் தற்போது யுபிஎஸ்சி உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்த உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. 2025 ஏப்ரல் 29 அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 
பிரீத்தி சுதன் யார்?
 
பிரீத்தி சுதன் ஆந்திரப் பிரதேச கேடரைச் சேர்ந்த 1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. அரசாங்க நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் கிட்டத்தட்ட 37 வருட அனுபவம் கொண்டவர்.  அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கை பாடத்தில் பட்டம் பெற்றவர். வாஷிங்டனில் பொது நிதி நிர்வாகத்தில் பயிற்சி பெற்றவர். 

 
பிரீத்தி சுதன், மத்திய சுகாதார செயலாளராக ஜூலை 2020 வரை மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். இதற்கு முன்பு பிரீத்தி சுதன் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளராக இருந்துள்ளார்.