திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 ஜூன் 2024 (08:53 IST)

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதி நியமனம்.. பதவியேற்பு எப்போது?

இந்தியாவின் ராணுவ தளபதியாக இருந்த மனோஜ் பாண்டே என்பவரது பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய ராணுவ தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ராணுவ தளபதியாக தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த நிலையில் அவரது பணி காலம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது

ஆனால் மக்களவைத் தேர்தலை ஒட்டி அவரது பதவிக்காலம் ஒரு மாதம் ஒரு மாதம் அதாவது ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து தற்போது புதிய ஆட்சி பதவியேற்று உள்ள நிலையில் புதிய ராணுவ தலைமை தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளின் படி ஜூன் 30-ம் தேதி இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக அவர் பொறுப்பு ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது

Edited by Siva