புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (11:00 IST)

வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகளின் தரவரிசை! – இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகிம் சக்திவாய்ந்த வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகள் குறித்த தரவரிசை பட்டியலை குளோபல் பயர்பவர் அமைப்பு வெளியிட்டுள்ளது.



உலக நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எதிரி நாடுகளுக்கு பதிலடி கொடுக்கவும் ராணுவ அமைப்பை உருவாக்கி வைத்துள்ளன. நவீன காலத்திற்கு ஏற்ப ராணுவ தளவாடங்கள் , வீரர்களுக்கான பயிற்சி என அனைத்தும் தொடர்ந்து மெறுகேற்றப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் குளோபல் பயர்பவர் என்ற அமைப்பு உலக நாடுகள் வைத்துள்ள ராணுவங்களின் வீரர்கள் எண்ணிக்கை, தளவாட வசதிகள், போர் உத்திகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சாதகங்களை ஆராய்ந்து உலக நாட்டு ராணுவங்களுக்கு தரவரிசை பட்டியலை தயாரித்துள்ளது.

இந்த பட்டியலில் எந்த வித ஆச்சர்யமும் இன்றி அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவை அடைந்துள்ள அமெரிக்க பிற நாடுகளுக்கும் ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது. இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளது.


இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் ஆயுதங்களை வாங்கி வரும் அதேசமயம் சொந்தமாக ஆயுதங்கள் தயாரிக்கும் பணிகளிலும் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு அடுத்தப்படியாக தென்கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், துருக்கி, பாகிஸ்தான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

அதுபோல உலகிலேயே மிக குறைவான ராணுவ பலத்தை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் பௌத்த நாடான பூடான் உள்ளது. அதை தொடர்ந்து மால்டோவா, சுரினாம், சோமாலியா, பெனின், லைபீரியா, பெலிஸ், சியாரா லியோன் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இந்த பட்டியல்களில் வடகொரியா இடம்பெறவில்லை. வடகொரியா அவ்வபோது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வந்தாலும் அந்நாட்டின் ராணுவ பலம், தளவாடங்கள் குறித்த தகவல்கள் ரகசியமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K