வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (16:52 IST)

மின்சார உற்பத்தி செலவைக் குறைக்க வேண்டும்- ராமதாஸ் அறிவுரை!

பாமக நிறுவனர் ராமதாஸ் மின்சார உற்பத்தி செலவை குறைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகத்தில் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறியிருக்கிறார். கரோனா பரவல் காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்து நினைப்பது நியாயமற்றது. சென்னையில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நிதித்துறை செயலாளர், தமிழக அரசின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளார். நிலைமையை சமாளிக்க மானியங்கள் ஒழிக்கப்பட வேண்டும்; மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இவை உடனடியாக உயர்த்தப்படாவிட்டாலும், அடுத்த சிறிது காலத்தில் கண்டிப்பாக கட்டணம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கடந்த 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட போதே, மின்சாரக் கட்டணம், பேருந்துக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவை உயர்த்தப்படும் என்ற அச்சம் எழுந்திருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் நிதித்துறை செயலாளரின் கருத்து அமைந்திருக்கிறது. தமிழகத்தின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருப்பது உண்மை. மின்சாரக் கட்டணம், பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தாமல் சேவை செய்ய முடியாது என்பதும் எதார்த்தம். ஆனால், மின்சாரக் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை தமிழகத்தில் ஏற்கெனவே அதிகமாக இருக்கும் நிலையில், இன்னொரு கட்டண உயர்வை மக்களால் சமாளிக்க முடியாது.

அதுமட்டுமின்றி, மின்சார வாரியமோ, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களோ கடுமையான இழப்பில் இயங்குகின்றன என்றால், அதற்கான காரணம் என்ன? என்பதைக் கண்டறிந்து அதை சரி செய்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அதை செய்யாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது அரசுக்கோ, மக்களுக்கோ பயனளிக்காது. தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2014-15 ஆம் ஆண்டில் ரூ.12,750 கோடி இழப்பை சந்தித்தது. 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மின்சார வாரியத்தின் இழப்பு 2015-16 ஆம் ஆண்டில் ரூ.5,750 கோடியாகவும், 2016-17 ஆம் ஆண்டில் ரூ.4,350 கோடியாகவும் குறைந்தது.

ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து மின்வாரியத்தின் இழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அதற்குக் காரணம் மின்சார வாரியத்தில் நடைபெற்ற முறைகேடுகளும், அதிக தொகைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதும் தான் என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் இழப்புக்கும் இதே காரணங்கள் முழுமையாக பொருந்தும். தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது தான் இழப்பு ஏற்பட முக்கியக் காரணம் ஆகும். தமிழகத்தில் ஒரு