ஆளுனரே திரும்பி போ.. தமிழகத்தை அடுத்து உத்தரபிரதேச சட்டப்பேரவையிலும் கோஷம்..!
ஆளுனரே திரும்பி போ.. தமிழகத்தை அடுத்து உத்தரபிரதேச சட்டப்பேரவையிலும் கோஷம்..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கோஷமிட்ட நிலையில் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநரை நோக்கி ஆளுநரை வெளியே போ என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் கோஷமே எழுப்பினர்.
ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் உரை நிகழ்த்தி கொண்டிருந்தபோது திடீரென ஆளுநரை திரும்பி போ என சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு கேரளம் ஆகிய மாநிலங்களில் ஆளுநர் மற்றும் அரசுக்கு இடையே மோதல் நடந்து வரும் நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்திலும் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கோஷமிட்டது அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran