வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2023 (08:11 IST)

எம்.எல்.ஏ.வுக்கு எதிராக அவதூறு: முதலமைச்சரின் சகோதரி அதிரடி கைது..!

sharmila
எம்எல்ஏவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக ஆந்திர முதலமைச்சர் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 
 
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து தெரிவித்தார்
 
குறிப்பாக நில அபகரிப்பு கொள்ளை ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர் ஈடுபடுவதாக தெரிவித்ததை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆதாரம் இல்லாமல் எம்எல்ஏ மீது அவதூறு கருத்தை தெரிவித்ததை அடுத்து ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva