செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 6 மே 2024 (18:04 IST)

மனைவியுடன் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு குற்றமல்ல..! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Unsexual
மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல என்று மத்திய பிரதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் மத்திய பிரதேசம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. தன் மனைவியுடன் குறிப்பிட்ட பாலியல் உறவில் இருக்கும் ஒரு கணவனின் செயல், பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதில் மனைவிக்கு சம்மதம் இல்லையென்றாலும், அது வன்கொடுமையில் வராது என்றும் ஒருவேளை அம்மனைவி 15 வயதுக்கு கீழ் இருந்தால் மட்டுமே அது குற்றமாக கருதப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். திருமணமான இருவரிடையே நடக்கும் பாலியல் செயல்பாடுகளின் சில கூறுகள், இந்திய சட்டத்தில் குற்றமென அங்கீகரிக்கப்படவில்லை என்றும் இதுபோன்ற சூழ்நிலைகளில் மனைவியின் சம்மதம் முக்கியமற்றது என்றே கருதப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்
 
இருப்பினும் , ஐபிசி 376 பி-யின் படி, நீதிமன்ற உத்தரவு காரணமாகவோ அல்லது வேறு விதமாகவோ கணவன் மனைவி தனித்தனியாக வாழும்போது, தன் மனைவியுடன் பாலியல் உறவு கொள்வது வன்கொடுமையாக கருதப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார். 

IPC பிரிவு 377ன் கீழ், சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் கணவன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது குற்றமாகாது எனக் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். பெண் தன் கணவன் மீது ‘இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல், பாலியல் வன்கொடுமை’ (ஐபிசி 377) மற்றும் மிரட்டல் (ஐபிசி 506) ஆகியவற்றின் கீழ் பதிந்த எஃப்.ஐ.ஆர்-ஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 
மே 1 வழங்கப்பட்ட இத்தீர்ப்பின் முழு விவரம் ஞாயிற்றுக்கிழமை வெளியானதை அடுத்து, ‘Marital Rape’ எனப்படும் ‘திருமண உறவில் நிகழும் பாலியல் குற்றங்கள் தற்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.