1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (07:06 IST)

வேளாண் மசோதாவால் உடையும் தேசிய ஜனநாயக கூட்டணி: பரபரப்பு தகவல்

சமீபத்தில் வேளாண் மசோதாக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்ததே. காங்கிரஸ், திமுக உள்பட பல எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மூன்று மசோதாக்களும் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது 
 
இந்த நிலையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பாஜக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோன்மணி அகாலிதளம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது 
 
இந்த மசோதாவால் பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விலகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவும், பாஜகவை தனது கூட்டணியில் இணைக்க கூடாது என்ற குரலும் தற்போது அதிமுகவினர்களிடையே வலுத்து வருகிறது