வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (13:24 IST)

கல்லூரி வளாகம், விடுதிகளில் சிசிடிவி கட்டாயம்! – யுஜிசி உத்தரவு!

கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி அமைக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ராகிங் எனப்படும் சீண்டல் குற்றங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. ராகிங் குற்றங்களை குறைக்க கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் ராகிங் தடுப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யுஜிசி புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.


அதன்படி கல்லூரி மாணவர்கள் ”ராகிங்கில் ஈடுபட மாட்டோம்” என antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ராகிங்கை தடுக்க கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும்.

ராகிங் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்க அடங்கிய போஸ்டரை விடுதிகள், உணவகங்கள், கழிப்பறைகளில் ஒட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.