செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2022 (19:08 IST)

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி: கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு

Modi
கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என இன்று கேரளாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
 
பிரதமர் மோடி இன்று கேரளாவின் கொச்சி நகருக்கு வருகை தந்தார். அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு வழங்குவதற்கான பிரச்சாரத்தில் நமது அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் அதே போல் கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்
 
கேரளாவில் நவீன கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது என்றும் இதற்காக ஒரு லட்சம் கோடி செலவு செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
கேரளாவில் பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது