செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 22 மே 2024 (14:58 IST)

ஏசி பேருந்துகளை இயக்குகிறது ஊபர் நிறுவனம்.. அனுமதி வழங்கியது அரசு..!

டெல்லியில் ஏசி பேருந்துகளை இயக்குவதற்கு மாநில அரசு ஊபர் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
உள்ளூர் அளவில் செயல்பட்டு வரும் வாகன பார்ட்னர்களுடன் இந்த ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் 19 முதல் 50 பயணிகள் வரை இந்த ஏசி பேருந்தில் பயணம் செய்ய முடியும் என்றும் உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
உபர் செயலின் மூலம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வழித்தடத்தையும் தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உண்டு என்றும் ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
மேலும் லைவ் லொகேஷன் மூலம் பயனர்கள் பேருந்து இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளலாம் என்றும் பேருந்து வரும் நேரத்தையும் அறிந்து கொள்ளலாம் என்றும் சோதனை அடிப்படையில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டதில் வெற்றிகரமாக ஏசி பருந்துகள் இயக்கப்பட்டது என்றும் ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கொல்கத்தாவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது டெல்லியில் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva