1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. sunitha kejriwal starts campaign in election

அரவிந்த் கெஜ்ரிவால் வருகிற மாதிரி தெரியவில்லை. களத்தில் இறங்கிய மனைவி சுனிதா..!

அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்போதைக்கு ஜாமீனில் வருவது போல் தெரியவில்லை என்பதால் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் அவர் எப்போது வெளியே வருவார் என்று தெரியாத நிலை உள்ளது

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அதிரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் ஒன்று தயாரிக்கப்படுவதாகவும் அந்த வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மற்றும் சுனிதா கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது

மேலும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்ல உள்ளார் என்றும் கூறப்படுகிறது.


Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
கடும் வெப்ப அலை எதிரொலி: மதியம் 12-4 மணி வரை பேருந்துகள் குறைப்பு..!