1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (15:57 IST)

எய்ம்ஸ் மருத்துவர்கள் கருத்து தவறானது: சிறை கண்காணிப்பாளருக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்..!

arvind kejriwal
சிறை கண்காணிப்பாளருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறிய கருத்து தவறானது என கூறியுள்ளார்.
 
திகார் சிறை கண்காணிப்பாளருக்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதத்தில் நான் இன்சுலின் கேட்கவில்லை என்பது தவறான தகவல், தனது உடல்நிலை மோசமாகவில்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்ததும் தவறானது. அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்வதாக சிறை கண்காணிப்பாளர் மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் போது அவரது சர்க்கரை அளவு கூடியதாக கூறப்பட்ட நிலையில் இன்சுலின் மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இதற்கு டெல்லி திகார் சிறை அதிகாரிகள் பதில் அளித்த போது அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இன்சுலின் கேட்கவில்லை என்று தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை சோதனை செய்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்ததாகவும் கருத்துக்கள் வெளியானது. 
 
இதனை அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்து தவறானது என்றும் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற தகவலும் தவறானது என்றும் கடிதம் எழுதியுள்ளார். 
 
Edited by Mahendran