திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2024 (15:26 IST)

சிறையில் இருந்து டெல்லியை ஆட்சி செய்கிறேன்: அரவிந்த் கெஜ்ரிவால் மனு..!

சிறையில் இருந்து டெல்லி மாநிலத்தை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சமீபத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் எப்போது வெளிவருவார் என்ற தகவலும் இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக மாற்று முதலமைச்சர் இன்னும் ஏற்பாடு செய்யப்படாமல் உள்ளது.

சிறையில் இருந்தே முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சில அறிவிப்புகளை வெளியிட அதன்படி அவரது அமைச்சர்கள் ஆட்சி செய்து கொண்டிருப்பதாக புறப்படுகிறது.

இந்த நிலையில் திகார் சிறையில் இருந்து டெல்லியை ஆட்சி செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் இருந்து ஆட்சி செய்ய பிரதமருக்கோ, முதல்வருக்கோ அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தவித தடையும் இல்லை என அந்த மனுவில் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் சிறையில் இருந்து ஆட்சி செய்ய நீதிமன்றம் அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Mahendran