திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2023 (14:08 IST)

எங்கள் அணியில் 2 எம்.பி.க்கள் வருவார்கள்- ஷிண்டே அணி தகவலால் உத்தவ் தாக்கரே அதிர்ச்சி..!

eknath shinde
எங்கள் அணியில் மேலும் இரண்டு எம்பிக்கள் வருவார்கள் என ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து உத்தவ் தேவ் தாக்கரே அணியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
சிவசேனா கட்சியை கடந்த ஆண்டு இரண்டாக உடைந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து அந்த அணிக்கு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மேலும் இரண்டு எம்பிக்கள் தங்கள் அணிக்கு வருவார்கள் என ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு பிறகு தங்கள் அணிக்கு மேலும் சிலர் வர இருப்பதாகவும், குறிப்பாக இரண்டு எம்பிக்கள் எங்கள் அணீக்கு வருவார்கள் என்றும் சிவசேனா தரப்பினர் தெரிவித்துள்ளனர் 
 
இந்த அறிவிப்பு உத்தவ் தேவ் தாக்கரே அணிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva